இதன்படி மழையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க தமிழகம் முழுவதும் குளோரின் கலந்த குடிநீரை தர உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாக கழுவுவது முக்கியமான வழிமுறையாகும் என்றும், சாலையோரம் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் மழையினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.