ஈபிஎஸ் கருத்துக்கு எச்.ராஜா ஆதரவு!

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (12:14 IST)
பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, தமிழக முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 
 
செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே தமிழக அரசு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஊரடங்கை நீட்டித்துவிட்டது.  
 
அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என தெரிவித்தார்.  
 
இதோடு, வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை நாட்டிற்குள் இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என பேசினார். எடப்பாடி பழனிச்சாமியின் இது போன்ற பேச்சு வழக்கத்துக்கு மாறான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச் ராஜா முதல்வரின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, உண்மை. உற்பத்தியாளரும் வெளிநாட்டில் இருந்து, டிஸ்ட்ரிப்யூட்டரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தான் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்