மீண்டும் தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு: தமிழக அரசு திட்டம்!

புதன், 3 நவம்பர் 2021 (12:42 IST)
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி வரும் நிலையில் தமிழ் புத்தாண்டு தினமும் மாறி மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிமுக ஆட்சியில் சித்திரை 1ஆம் தேதியும் திமுக ஆட்சியில் தை 1ஆம் தேதியும் தமிழ்புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் எந்த நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்
 
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால் சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி மாறிய நிலையில் மீண்டும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது
 
இது குறித்து அரசாணையும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆண்டாண்டு காலமாக சித்திரை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அதிலிருந்து மாறுவதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்