நேசமணி டிரெண்டிங் குறித்து பேச மறுத்த ஹெச். ராஜா ...

வியாழன், 30 மே 2019 (20:36 IST)
சமூகவலைதளங்களில் அவ்வபோது எதாவது ஒரு விஷயம் வைரலாகப் பரவி ட்ரண்ட் ஆகும். அதுபோல நேற்று திடீரென நேசமணிக்காக பிராத்தனை செய்யுங்கள் எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரண்ட் ஆனது. இது என்ன எனத் தெரியாமல் பலரும் குழப்பம் அடைந்தனர். அதன் பின்னர்தான் அந்த ஹேஷ்டேக்குக்குப் பின்னுள்ள நெட்டிசன்களின் குறும்பு தெரிந்தது.
டிவிட்டரில் ஒருவர் சுத்தியல் ஒன்றின் புகைப்படத்தை வெளியிட்டு ‘இதற்கு உங்கள் நாட்டில் பெயர் என்ன?’ எனக் கேட்க அதற்குப் பதிலளித்த குறும்பர் ஒருவர் ‘இதுதான் சுத்தியல். இதைக் கொண்டு அடிக்கும் போது டிங்டாங் என சத்தம் கேட்கும். பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி(பிரண்ட்ஸ் பட வடிவேலு) இதனால் தாக்கப்பட்டார்’ எனக் குறிப்பிட்டார். உண்மை அறியாத மற்றொருவர் ‘ஓ.. இப்போது நேசமணி எப்படி இருக்கிறார்? ‘ எனக் கேட்டார்.
 
அவரின் வெகுளித்தனமானக் கேள்விக்குப் பதிலளித்த குறும்பர் ‘இப்போது நன்றாக இருக்கிறார். நாங்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து முதலுதவி செய்தோம்.’ எனக் கூற அந்த நபர் ‘நேசமணிக்காக பிராத்தனை செய்வோம்’ எனக் கூற, அதைப் பிடித்துக்கொண்ட நெட்டிசன்கள் அதையே ஹேஷ்டேக்காக்கி டிரண்ட் செய்துள்ளனர். இப்போது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் முழுவதும் நேசமணிக்கான பிராத்தனைகளாகக் குவிந்து வருகின்றனர். இன்னும் சிலரோ ஒருபடி மேலேப் போய் நேசமணி தாக்கப்பட்டது அயல்நாட்டு சதியாக இருக்குமோ என்ற அளவில் சந்தேகங்களைக் கிளப்பி... அது உலக அளவில் டிரெண்டிங் ஆனது. 
 
இன்று பிரதமராகப் பதவியேற்ற மோடியைக்குறித்து காலைமுதல்  டுவிட்டரில் டிரெண்டிங்  ஆகும்  நிலையில் இருந்தபோது, அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ’காண்ட்ராக்டர் நேசமணி  ’ டிரெண்டிங் ஆனதுதான் இன்றைய ஹைலைட்.
 
இந்நிலையில் நேசமணி குறித்து பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜாவிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
 
இதுகுறித்து அவர் முன்னதாக கேள்விப்படாததால், இதுபற்றி தெரிந்துகொண்டு பிறகு நிதானித்துவிட்டு, நீங்கள் இந்த நேசமணி பற்றித்தான் கேட்கிறீர்களா ?என்று கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்