டிவிட்டரில் டிரெண்டிங் ஆன ஹெச்.ராஜா - ஆனால் எப்படி தெரியுமா?

புதன், 18 ஏப்ரல் 2018 (13:26 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி.யை கீழ்த்தரமாக விமர்சித்ததை தொடர்ந்து, அவருக்கு எதிராக டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அடிபட்டிருப்பதால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, நிர்மலா தேவியை யாரென்றே தெரியாது எனக் கூறியிருந்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதில் சிலவற்றுக்கு கோபமாகவும், சிலவற்றுக்கு சிரித்துக்கொண்டும் ஆளுநர் பதிலளித்தார். 
 
இந்நிலையில், ஹெச். ராஜா  தனது டிவிட்டர் பக்கத்தில் “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே” எனப் பதிவிட்டுள்ளார். 
 
ஹெச்.ராஜாவின் இந்த பதிவு திமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. இது மிகவும் கீழ்த்தரமான பதிவு என அவருக்கு எதிராக பலரும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், #எச்சபொறுக்கிராஜா என்கிற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். பலரும் இதை பயன்படுத்தியதில், டிவிட்டரில் இந்த ஹேஸ்டேக் தேசிய 2ம் இடத்தை பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்