கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற ஹெச் ராஜா போலீஸாரிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த ஊரவலத்திற்கு சென்னை ஹைகோர்ட் விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து போலீசார் கூறியபோது, "ஹை கோர்ட்டாவது, மயிராவது" என தகாத வார்த்தைகளால் போலீசாரை திட்டினார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாக அவரின் இழிவான பேச்சுக்கு அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது ஹெச். ராஜா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.
சட்டத்தை மதிக்காமல் ஹைகோர்டையும் போலீசையும் அவதூறாகப் பேசியதாக ஹெச் ராஜா மீது போடப்பட்ட வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. குற்றப்பத்திரிக்கையின் நகலை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 29-க்கு ஒத்திவைத்தனர். ஹெச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டுளள்து. எனவே அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம்.