உத்தரவு எஜமான்: ஸ்டாலினை நக்கலடிக்கும் எச்.ராஜா!

சனி, 8 ஜூலை 2017 (13:00 IST)
மத்தியில் உள்ள பாஜக அரசு ஆளுநர் மூலம் மாநிலங்களில் தனி ஆட்சி நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


 
 
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடி மாநில அரசுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல் மூன்று பாஜக உறுப்பினர்களை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து அவர்களுக்கு ரகசியமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டன் தெரிவித்துள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாநில அரசை சிதைத்து ஆளுநர் மூலம் தனி அரசு நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் நக்கலாக பதிலளித்துள்ளார். மாநில அரசை சிதைத்து ஆளுநர் மூலம் தனி அரசு நடத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலின் என ஸ்டாலின் கூறுவதற்கு, ‘உத்தரவு எஜமான்’ என எச்.ராஜா நக்கலாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்