வெண்டிலேட்டரில் 10 பேர்.. 6 பேர் கவலைக்கிடம்.. ஜிப்மரில் சிகிச்சை பெறுபவர்களின் விவரங்கள்..!

Siva

வெள்ளி, 21 ஜூன் 2024 (07:37 IST)
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேர் கவலைக்கிடம் என்றும், 10 பேர் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, உயர்தர உயிர்காக்கும் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விஷச்சாராயம் குடித்ததால் ஜிப்மரில் நேற்று முன்தினம் 19 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3பேர் அன்று மாலையே உயிரிழந்தனர். தொடர்ந்து 16 பேர் ஜிப்மர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 10 பேர் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற 6 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

விஷச் சாராயம் குடித்தவர்களில் இதுவரை 49 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்