ஆனால் அவர் அந்த பதவி வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாக அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்த குலாம் நபி ஆசாத் தற்போது காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் இந்த முடிவை எடுத்துள்ளது காங்கிரஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.