பசுமை தீர்ப்பாயத்தில் மனு : தொடக்கமே தோல்வியை சந்தித்த ஸ்டெர்லைட் நிர்வகம்

வியாழன், 5 ஜூலை 2018 (12:27 IST)
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

 
இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஸ்டெர்லையை நிரந்தரமாக மூடுவதாகவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வந்த வேதாந்தா குழுமம் சார்ப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
அதெ நேரம், இந்த வழக்கில் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தமிழக அரசு சார்பிலும், சமூக ஆர்வலர் பாத்திமா சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், இந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசின் கருத்தை பெறாமல் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்தனர். மேலும், இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்