லண்டன் சந்திப்புக்கு பின் ஸ்டர்லைட் ஆதரவு; பாபா ராம்தேவ் டுவிட்

செவ்வாய், 26 ஜூன் 2018 (15:35 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் அப்பாவி மக்கள் மூலம் சர்வதேச சதிகாரர்கள் செய்த கிளர்ச்சி என பாபா ராம்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
பதஞ்சலி நிறுவனத்தின் துணை நிறுவனர் பாபா ராம்தேவ் திங்கட்கிழமை நேற்று லண்டனில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் அனில் அகர்வாலை புகழ்ந்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
 
எனது லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலை சந்தித்தேன். நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார செழிப்புக்கான அவரது பங்களிப்பை நான் வணங்குகிறேன்.
 
தென்னிந்தியாவில் உள்ள வேதாந்தாவின் ஒரு ஆலையில் அப்பாவி மக்கள் மூலம் சர்வதேச சதிகாரர்கள் கிளர்ச்சி ஏற்படுத்தினர். தொழிற்சாலைகள் நாட்டின் வளர்ச்சிக்கான கோயில்களாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்