’கழுவேலி ஈரநிலத்தை’ 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை !
திங்கள், 6 டிசம்பர் 2021 (20:44 IST)
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் முதல்வர் பதவி ஏற்றது முதல் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இந்நிலையி்ல், கழுவேலி ஈரநிலத்தை தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கழுவேலி ஈரநிலத்தை தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் கழக அரசில் போடப்பட்டுள்ள இந்த ஆணை,பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.