ஆளுநர் அனுப்பிய அறிக்கை?: ஆகஸ்டில் ஆட்சி கலைய வாய்ப்பு!

செவ்வாய், 9 மே 2017 (16:06 IST)
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்று அனுப்பியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அந்த அறிக்கையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்க சரியில்லை என அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.


 
 
ஆளுநர் அனுப்பியதாக கூறப்படும் அறிக்கையை வைத்து மத்திய அரசு தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் அது ஆகஸ்டில் நடக்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக தேர்தல் நிறுத்தப்பட்டது. இதில் முதல்வர் உட்பட ஏழு அமைச்சர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையில் அதற்கான ஆதாரங்கள் சிக்கின.
 
அதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. அதன் பின்னர் அந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சந்தேகத்துக்குறிய வகையில் மரணமடைந்தார். அதனையடுத்து அவரது நண்பர் சயனும் விபத்தில் சிக்க அவரது மனைவியும் குழந்தையும் இறக்க அவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
 
அடுத்தடுத்து நடந்து வரும் இந்த சம்பவங்களை தொகுத்து பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
 
தற்போது அமைச்சர் விஜயப்பாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியனும் மர்மமான முறையில் இறந்துள்ளது தமிழக அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் அறிக்கையை வைத்து மத்திய அரசு குடியரசுத்தலைவர் தேர்தல் முடிந்த பின்னர் தமிழகத்தில் ஆர்டிக்கிள் 365-ஐ பயன்படுத்தி ஆட்சியை ஆகஸ்டில் கலைக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்