தெலுங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகள் 4 பேரை காவல்துறை என்கவுண்ட்டர் செய்தனர். இந்த சம்பவத்தை நாட்டில் பல பெண்கள் கொண்டாடி வந்தனர். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களுக்கு என்கவுண்ட்டர் தான் சரியான தண்டனை எனவும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய எம்.பி.கனிமொழி ”பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் ”மரண தண்டனை மட்டுமே எல்லா குற்றங்களுக்கும் தீர்வாகாது, பாலியல் கல்வி மிகவும் அவசியம், அதை அரசே கொண்டு வரவேண்டும்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.