நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி !

செவ்வாய், 29 நவம்பர் 2022 (18:20 IST)
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிவாரண  நிதி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போர் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னகப்பட்டு குளத்தில்,  மூழ்கிய முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில்,  குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின்  இரங்கல் மற்றும் ஆறுதல்கள் கூறியதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்  முதல்வரின் பொது நிவாரண   நிதியிலிருந்து வழங்கவும் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்