மைக்செட் குடோனில் திடீர் தீ - ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

J.Durai

புதன், 1 மே 2024 (15:21 IST)
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ்(49) இவர் மைக்செட், கல்யாண,அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். 
 
இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில்  தனியார் இடத்தில் தகர செட்டு அமைத்து அந்த பொருட்களை அங்கு வைத்து வருகிறார்.
 
விழா காலங்களில்  பயன்படுத்தப்படும் கலைநயம் மிக்க அலங்கார பொருட்கள், மைக் செட்டுகள்,கூம்பு வடிவ குழாய்கள் மைக் செட் பாக்ஸ்கள் டியூப் லைட்டுகள், சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் ஆகியவை மைக்செட் கடையில் வைத்திருந்தார்  திங்கட்கிழமை இரவு வரை அங்கு இருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
 
இந்நிலையில் திடீரென இரவு சுமார் 12.20 மணியளவில் தீப்பற்றியது. உடன் அக்கம் பக்கத்தினர்  நத்தம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையில் வீரர்கள் குழுவினர்  தீயை 2 மணி நேரம் போராடி அணைத்தனர். 
 
குடோனில் இருந்த சுமார்  ரூ.40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. 
 
தீ பிடித்ததற்கான காரணம்  மின்கசிவா அல்லது வேறு  என்னவாக இருக்கும் என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்