பொங்கல் வைக்க இதுதான் நல்ல நேரம்! மறந்துடாதீங்க! – பொங்கல் 2023!

சனி, 14 ஜனவரி 2023 (18:37 IST)
தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கள் பண்டிகையை கொண்டாட நல்ல நேரம் மற்றும் சில அறிவுறுத்தல்கள்.

நாளை தமிழ்நாடு முழுவதும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கலை சந்தோஷமாக கொண்டாடும் அதே சமயம் முறைப்படி கொண்டாடுவதும் மிகவும் முக்கியம். நல்ல நேரத்தில் பொங்கலை பொங்கி, படையல் செய்து சூரிய பகவானை வழிபட்டால் சகல நன்மைகளும் கேட்காமலே நமக்கு அருள்வார்.

பொங்கல் வைக்க சரியான நேரம் - காலை 07.45 முதல் 08.45 வரை. மாலை 03.30 முதல் 04.30 க்கு இடைப்பட்ட நேரத்திலும் பொங்கல் வைக்கலாம். வெளிநாடுகளில் இருப்பவர்கள், காலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் அதற்கு பதிலாக பகல் 1.30 முதல் 02.30 வரையிலும், மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம். ராகுகாலம், எமகண்டம் மற்றும் குளிகை நேரங்களில் பொங்கல் வைப்பதையும், படைப்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்