சில நாட்கள் கேப் விட்டு மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை!

திங்கள், 21 செப்டம்பர் 2020 (11:22 IST)
தங்கத்தின் விலை தொடர்சியாக சில நாட்கள் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.  
 
கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதிலும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது.  
 
 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 192 குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 24 குறைந்து ரூ.4,934 விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 192 குறைந்து  ரூ. 39,472 விற்பனையாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்