
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக மாற்றமில்லாமல் விற்பனையான நிலையில் இன்று சற்று சரிவை சந்தித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார காரணிகளால் தங்கம் விலை கடந்த சில மாதங்களில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 21ம் தேதி இதுவரையிலான விலை உயர்வில் உச்சமாக 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.96000 ஆக விற்பனையானது. ஆனால் மறுநாளே ரூ.3,680 சரிந்த தங்கம் விலை அடுத்தடுத்து சரிவை சந்தித்தது.
கடந்த இரண்டு நாட்களாக சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனையாகி வந்த தங்கம் இன்று மேலும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.50 குறைந்து ரூ.11,450க்கு விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.12,490 ஆக விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை கடந்த 4 நாட்களாக மாற்றமின்றி கிராம் ரூ.170 என்ற விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
Edit by Prasanth.K