கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அதோடு இந்த நகைக்கடன் தள்ளுபடி செய்வதால் அரசுக்கு ரூ.6,000 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.