கார் பந்தய தொகையை நிவாரண நிதிக்கு ஒதுக்குங்கள்: ஜிகே வாசன் கோரிக்கை

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:30 IST)
கார் பந்தயத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு ஒதுக்கிய தொகையை வெள்ள நிவாரண பணிகளுக்கு ஒதுக்குங்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் பார்முலா 1 கார் பந்தயத்தை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இந்த பந்தயத்தை ரத்து செய்துவிட்டு அதற்காக ஒதுக்கப்பட்ட  நிதி யை மழை, வெள்ள நிவாரண பணிக்கு பயன்படுத்துங்கள் என்று ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்

மேலும் வெள்ளத்தில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் வாகனங்கள் சேதத்தை கணக்கிட்டு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஆட்சியாளர்களுக்கு இந்த மழை எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றும் அரசு செய்துள்ள உள்கட்டமைப்பு பணிக்கான செலவு எந்த பயனும் அளிக்கவில்லை என்பதை இந்த மழை தெளிவாக காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்