’அப்பா ப்ளீஸ் இனிமே குடிக்காதீங்க!’ – கடிதம் எழுதிவிட்டு சிறுமி தற்கொலை!

ஞாயிறு, 4 ஜூன் 2023 (15:46 IST)
தந்தை அளவுக்கு அதிகமாக குடிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மது போதை மீதான மோகத்தால் பலர் குடும்பத்தை சரிவர கவனிக்காததும், குடும்பத்தில் உள்ளவர்களை கொடுமைப்படுத்துவதும் காலம் காலமாக பெரும் பிரச்சினையாக பல குடும்பங்களில் நீடித்து வருகிறது. பலர் குடிப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வந்தாலும், பலர் குடியை விட மனமில்லாமல் தொடர்ந்தே வருகின்றனர்.

அவ்வாறாக வேலூரை சேர்ந்த ஒருவர் தினமும் குடித்து விட்டு தனது குடும்பத்தில் சண்டையிட்டு வந்துள்ளார். இதை தாங்கி கொள்ள முடியாத அவரது 16 வயது மகள் விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு விஷ்ணு பிரியா ஒரு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார். அதில் “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, என் தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்போது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும். போயிட்டு வரேன்” என எழுதியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்