கருணாநிதி நினைவு நாணயம்.. காயத்ரி ரகுராம் தெரிவித்த சர்ச்சை கருத்து..!

Mahendran

புதன், 10 ஜூலை 2024 (14:17 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் இந்த செய்திக்கு அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக இன்று காலை செய்தி வெளியானது. புதிய நாணயத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கருணாநிதி பெயருடன் தமிழ் வெல்லும் என்ற வாசகம் இடம் பெற உள்ளது.

இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியாகவுள்ளது. மேலும் இதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த செய்தி குறித்து சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது:

காந்தி தாத்தாவை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக மோடி தாத்தா மற்றும் கலைஞர் தாத்தாவின் முகத்தை நாணயத் தாள்களில் விரைவில் அவர்கள் அதையும் மாற்றலாம், அல்லவா? ஓர் நாள் திமுக, பாஜக ஆட்சியில் அது நடக்கலாம்.. காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை அழிக்க பாஜகவும், திமுகவும் மெல்ல மெல்ல முயல்கின்றன.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்