நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அதிகப்பெரும்பான்மையில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்கு இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ. 1,248.29 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.