இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு தடை விதிக்க, உயர் நீதிமன்றம் அந்த தடைக்கு தடை விதித்தது என்பதும் தெரிந்ததே. தற்போது கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது. இருப்பினும் திமுக உள்பட மற்ற அரசியல் கட்சிகள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை விடாமல் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த திமுக, தமிழகத்தில் இரண்டு மணி நேரம் மதுக்கடைகள் அதிகரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தபோது எதிர்ப்பு தெரிவித்து திமுக, தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரியில் நாளை முதல் 12 மணி நேரம் மதுக்கடைகளை திறக்க இருப்பதாக எடுத்துள்ள முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்