அமலுக்கு வந்தது குடியுரிமை சீர்திருத்த சட்டம்: மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

வெள்ளி, 10 ஜனவரி 2020 (22:25 IST)
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டம் பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இரு அவைகளிலும் வெற்றி பெற்றது
 
அதன் பின்னர் இந்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதியும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ள நிலையில் ஜனவரி 10 முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது 
 
இதனையடுத்து இன்று முதல் குடியுரிமை சீர்திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு சற்றுமுன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே இன்று முதல் குடியுரிமை திருத்த சட்ட விதிகள் அனைத்தும் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது 
 
ஒரு பக்கம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராடி வரும் நிலையில் இன்று முதல் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டது மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்