தனியார் மயமாகும் BHEL? மோடி அமைச்சரவை ஒப்புதல்!

புதன், 8 ஜனவரி 2020 (15:21 IST)
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக் நடைபெறும் நிலையில் பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 
 
விலைவாசியை மனதில் கொண்டு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 6,00வழங்க வழி வேண்டும், அரசுத் துறைகள் தனியார்மயமாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. 
 
இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க தொழில்துறை அமைச்சர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஸ்டிரைக் நடைபெறும் நிலையில் பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க ஒப்புதல் தரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் 50 சதவீதத்திற்கும் மேலான பங்குகள் விற்கப்பட்டால் பெல் தனியார் மயமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்