தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கட்டுப்பாட்டில் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 22 அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள், 461 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 22 அடிப்படை பயிற்சி மையங்கள் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்பயிற்சி மையங்களில் பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், எலக்டீரிசியன், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.