கோவை அம்மா உணவகத்தில் இலவச உணவு: செலவை ஏற்கிறது திமுக!

வெள்ளி, 28 மே 2021 (08:44 IST)
கடந்த இரண்டு நாட்களாக சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து கோவைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது ஏற்கனவே கோவையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது 
 
ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள மக்கள் வசதியை முன்னிட்டு அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அம்மா உணவகங்கள் முழுவதிலும் இலவச உணவுகள் வழங்கப்படும் என்றும் அதன் செலவுகளை திமுக ஏற்கும் என்றும் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் அறிவித்துள்ளனர் இதனை அடுத்து கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
ஊரடங்கு காரணமாக வேலையின்றி வருமானமின்றி இருக்கும் மக்களுக்கு தற்போது கை கொடுப்பது அம்மா உணவகம் மட்டுமே. அதில் குறைந்த விலையில் உணவுகள் கிடைத்து வரும் நிலையில் தற்போது இலவசமாக கோவையில் உணவுகள் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்