இந்நிலையில் ஒவ்வொரு, தமிழனும், ஒவ்வொரு விதமாக அவரது மறைவையும், நினைவையும் உணர்வுகளாக வெளிப்படுத்தி வரும் நிலையில் கரூர் ராமானூர் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் சுரேஷ் (வயது 30), என்னும் வாலிபர் தன்னுடைய சலூன் கடையில் இன்று அவரது நினைவை பறைசாட்டும் வகையில் வாடிக்கையாளர்கள் அனைவருக்கு அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி இலவச கட்டிங், சேவிங் என்று வாசகங்கள் அடங்கிய விளம்பரத்தை கடையின் முன் வைத்து சுமார் 100 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செய்தார்.
இது பற்றி அவர் கூறுகையில் ”அப்துல்கலாமின் இறப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல, ஒவ்வொரு மனிதனும் வாழ்விற்கு பின்பும், வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில் அவர் சிறந்து முறையில் வாழ்ந்து உள்ளார். இவரது நினைவு நாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு கட்டிங், சேவிங் செய்து வருகிறேன். அவர் இறந்த போது எனது கடைக்கு விடுமுறை அளித்து அஞ்சலி செலுத்தினேன். அடுத்த வருடம் வசூல் செய்யும் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் படிப்பிற்கான பாடப்புத்தகங்களை வழங்க இருக்கிறேன்” என்று கூறினார்.