இதில், ஒன்றரை லட்சத்திற்கு மேல் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில், தங்கள் யூடியூப் சேனலில் 1200 ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் மூதலதன தொகையுடன் 1500 ஆகத் திருப்பித் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தம்பதியர் ,44 பேரிடம் 41 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, தம்பதியரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், பைக், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.