இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் தெரிவித்துள்ளதாவது:
‘’சென்னையில் வரும் டிசம்பர் 9 மற்றும் 10 தேதி நடைபெறவுள்ள இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4 போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை - காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.
மேலும், இந்தப் போட்டிக்கான டிக்கெட்-ஐ இன்று அறிமுகம் செய்தோம். இச்சிறப்புக்குரிய போட்டிக்கான பாதுகாப்பு - அடிப்படை வசதிகள் - மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். இந்தியாவிலேயே முதன்முறையாக நடைபெறும் இந்த சிறப்புக்குரிய போட்டியின் வெற்றியின் மூலம் புது வரலாறு படைத்திடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.