முதல்வர் ஸ்டாலினுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பாராட்டு!

திங்கள், 21 ஜூன் 2021 (21:04 IST)
முதல்வர் ஸ்டாலினுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பாராட்டு!
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக முதல்வரை தலை சிறந்த பொருளாதார நிபுணர் பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் உள்பட 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது 
 
இந்த குழுவை அமைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கௌசிக் பாசு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் இவர்களின் கருத்து இருந்தால் நாட்டின் பொருளாதாரம் எட்டிய உச்சத்திற்கு மீண்டும் திரும்பும் எனவும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்