கடந்த 1964ஆம் ஆண்டு கேரள காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கிய கே.எம்.மாணி, 1965ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பலா தொகுதியில் இருந்து முதன் முதலாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டமன்றத்துக்கு சென்றார். அதுமுதல் தொடர்ச்சியாக நடந்த 12 தேர்தல்களிலும் அதே பலா தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இவரது கட்சி பங்கு பெற்றதை அடுத்து நிதி, வருவாய், சட்டம் உள்ளிட்ட அமைச்சர் பொறுப்புகளையும் வகித்துள்ளார். இருப்பினும் முதல்வராக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்தது. அதற்கு ஓரிரு முறை வாய்ப்பு வந்தபோதும் அது நடக்காமல், கடைசி வரை கனவாகவே போனது.