5 வழக்குகளும் தள்ளுபடி : கருணாநிதி உடல் மெரினாவில் புதைக்கப்படுமா?

புதன், 8 ஆகஸ்ட் 2018 (08:41 IST)
மெரினா கடற்கரையில் ஜெ.வின் சமாதி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டதால், இது தொடர்பான மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.30 மணிக்கு காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது. 
 
இது தொடர்பாக நேற்று இரவு நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று காலை 8 மணிக்கு மறு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில்பனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் உடலை காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்ய 2 ஏக்கர் நிலம் ஒதுக்கியது அரசின் கொள்கை முடிவாகும். இது மத்திய அரசின் விதிகளுக்கு உட்பட்டே எடுத்த முடிவாகும். எனவே அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என  தெரிவித்துள்ளது. 
 
அதேசமயம், தலைவர்களின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட 5 வழக்குகளும் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது. எனவே, அந்த 5 மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், இது தொடர்பாக வேறு ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா என நீதிபதி ஆராய்ந்து வருகிறார்.
 
5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டதால், தீர்ப்பின் முடிவு திமுகவிற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்