மியூகோர்மைகோசிஸ் நோய்க்கு தமிழகத்தில் முதல் மரணம்

வியாழன், 20 மே 2021 (10:02 IST)
கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். 

 
பூஞ்சை தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை அல்லது ‘மியூகோர்மைகோசிஸ்’ நோய் ஏற்படுகிறது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு சிகிச்சையின் காரணமாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தற்போது இந்த பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. 
 
இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். 
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57வயது வெல்டிங் பட்டறை உரிமையாளர் சவுந்தர் ராஜன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்