விஜய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் விபரீதம்.. சிறுவனின் கையில் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

Mahendran

சனி, 22 ஜூன் 2024 (13:11 IST)
விஜய் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் நடந்த விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த சோக சம்பவம் காரணமாக இந்த ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று விஜய் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் அதையும் மீறி விஜய் ரசிகர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர். 
 
அந்த வகையில் சென்னையில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒரு சிறுவனை வைத்து சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் சிறுவனின் கைகள் பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைத்து ஓடுகளை உடைக்கும் நிகழ்வு நடந்தது. 
 
அந்த சிறுவனும் தீக்கையுடன் ஓடுகளை உடைத்த நிலையில் அவனது கையில் ஏற்பட்ட தீ அணையவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த பரபரப்பில் பெட்ரோலை கையில் வைத்திருந்த நபர் பெட்ரோலை கீழே சிந்தியதால் அந்த பகுதி முழுவதும் தீ பரவியது. 
 
இதனை அடுத்து தீக்காயம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்