தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தின் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நாடெங்கிலும் இருந்து கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர், தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று காவல்துறையினர் பதிந்த எஃப்.ஐ.ஆர் பதிவிற்கும் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் கடைக்கு முன்னிருந்த சிசிடிவியின் பதிவான காட்சிகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக மீடியாக்கள் பகிரங்கமாக செய்திகள் வெளியிட்டனர்.
அப்போது, தரமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்காக 10 முதல் 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கில் எஃப்.ஐ.ஆர் திருத்தி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் கூடியவிரையில் முடிவு தெரியும் என கூறியுள்ளார்.