அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.