காய்ச்சல் மாணவர்களுக்கு 10ஆம் தேர்வில் இருந்து விலக்கா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

வெள்ளி, 5 ஜூன் 2020 (20:17 IST)
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் 15 ஆம் தேதி காய்ச்சல் உள்ள மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்களா அல்லது அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா என்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பதில் அளித்துள்ளார் 
 
10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் நாளில் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக அறியப்பட்டால் அவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது குறித்து முதல்வரிடம் பேசி வெகுவிரைவில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்தத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது முதல் கட்டமாக தேர்வறைகள், மேசைகள் இருக்கைகள் ஆகியவை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இது குறித்த ஆய்வு வரும் 6ம் தேதி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் என்றும் இந்த கருவிகளை பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து வாங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் நடத்த வேண்டாம் என அரசியல் தலைவர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்