பொண்டாட்டி ஊருக்கு போனதும் மகளுடன் உல்லாசம்: கர்ப்பத்தால் வந்த சிக்கல்

சனி, 10 நவம்பர் 2018 (19:02 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தான் பெற்ற மகளையே கட்டயப்படுத்தி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த விவகாரம் தற்போது தெரியவந்துள்ளது. 
 
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் உள்ளாள்.
 
இந்நிலையில், பாலமுருகனின் மனைவி ஊருக்கு சென்ற போது, தனது மகளை கட்டாயப்படுத்தி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது போன்று நாள்தோறும் பல முறை தனது மனைவி ஊரில் இருந்து வருவதற்குள் செய்துள்ளான். 
 
இதனால், அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளாள். அதனை கண்டுப்பிடித்த அவளது தாயார் கேட்ட போது, வேறு வழியின் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். 
 
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் ஜோதி, தனது கணவர் மீது ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்