கிலோ ரூ.6 மட்டுமே: சாலையில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!

புதன், 29 செப்டம்பர் 2021 (20:18 IST)
கிலோ ரூ.6 மட்டுமே: சாலையில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!
தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் தக்காளி விலை வெறும் ரூபாய் 6 மட்டுமே விற்பனையானதால் வேதனை அடைந்த விவசாயிகள் தாங்கள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த தக்காளிகளை சாலையில் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூபாய் 20 முதல் 25 வரை விற்பனையாகி வந்த தக்காளி தற்போது வெறும் 6 முதல் 8 ரூபாய் மட்டுமே விற்பனையாகிறது 
 
இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி அறுவடை செய்யும் கூலி கூட டைக்கவில்லை என்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த தக்காளிகளை சாலையோரங்களில் கொட்டி விட்டுச் செல்லும் அவல நிலையை பார்த்து பொதுமக்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்