தட்டி கேட்டா தண்ணி கனெக்‌ஷன கட் பண்ணுவீங்களா? விவசாயி ஆதங்கம்

ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (15:56 IST)
மதுரை உசிலம்பட்டியில் கழிவுநீர் கலப்படம் பற்றி புகார் கொடுத்த விவசாயிக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய சங்கத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் கலந்துகொண்டு, பாசனக் கண்மாயில் கழிவுநீர் கலப்பதாகவும் இதுகுறித்து நகராட்சி நிர்வாத்திடம் பலமுறை மனு அளித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினார். அவரது கேள்விக்கு கூட்டத்தில் யாரும் பதில் அளிக்கவில்லை. இதனால் விரக்தியுடன் சிவப்பிரகாசம் வீடு திரும்பினார்.
 
இன்று சிவப்பிரகாசத்தின் வீட்டிற்கு வந்த உசிலம்பட்டி நகராட்சி ஊழியர்கள், வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். அவர்களைத் தட்டிக்கேட்ட போது இது நகராட்சி ஆணையரின் உத்தரவு என கூறியுள்ளனர். குறைதீர்க்கும் கூட்டம் என்பது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கே தவிர மேலும் அதிகரிப்பதற்கு அல்ல. தட்டி கேட்டதற்காக குடிநீர் இணைப்பை துண்டித்த உசிலம்பட்டி நகராட்சி நிர்வாத்தை கண்டித்து விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்த உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்