காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்ய காலஅவசாகம் நீடிப்பு

சனி, 13 பிப்ரவரி 2016 (01:12 IST)
காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்ய காலஅவசாகம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

தமிழக சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித்  தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் விருப்ப மனுக்கள் 15 ஆம் தேதி கடைசி நாள் என்பதை மாற்றி, பிப்ரவரி 17 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்