அதில், தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர்கள் சுமார் 50% பார்வையாளர்களுடம் செயல்பட அனுமதி எனவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி எனவும், இறப்பு நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதி எனவும், உணவகம், பேக்கரிகள், வாடிக்கையாளர்கள் மட்டும் 50 % பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சலூங்கள், கேளிக்கைபூங்காக்கள், அழகு நிலையங்களில் சுமார் 50% பேருக்கு மட்டும் அனுமதி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.