அடுத்த கல்வியாண்டில் எப்போது எந்த தேர்வு! – வெளியானது விரிவான பட்டியல்!

புதன், 25 மே 2022 (15:27 IST)
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடி பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன். இந்நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்து அடுத்த கல்வியாண்டிற்காக பள்ளிகள் திறக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது அடுத்த கல்வியாண்டில் தேர்வுகள் நடைபெறும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலாண்டு தேர்வு 1 முதல் 10 வகுப்புகளுக்கு செப்டம்பர் 26ம் தேதியும், 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23ம் தேதியும் தொடங்குகிறது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும்.

அரையாண்டு தேர்வுகள் 11,12ம் வகுப்ப்களுக்கு டிசம்பர் 16ம் தேதியும், 1 முதல் 10 வகுப்புகளுக்கு டிசம்பர் 19ம் தேதியும் தொடங்கும். அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதி முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு 2023 ஏப்ரல் 20ல் தொடங்கி 28ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்