தமிழகத்தில் மாலை நேர உழவர் சந்தைகள்: முதல்வர் அறிவிப்பு

ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:08 IST)
தமிழகத்தில் மாலை நேர உழவர் சந்தைகள் திறந்து வைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் மாதத்திற்கு ஒரு முறை வீதம் 37 இடங்களில் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மாலை நேர உழவர் சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னையில் மட்டும் இந்த உழவர் சந்தை கிடையாது. இந்த உழவர் சந்தையில் உழவர்களின் சிறுதானியங்கள் பயறு வகைகள் ஆகியவை விற்பனை செய்யப்படும் என்றும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த உழவர் சந்தையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கப் போவதாகவும் அவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
திருச்சி தஞ்சாவூர் கரூர் ஆகிய சில மாவட்டங்களில் முன்னோட்டமாக மாலை நேர உழவர் சந்தைகள் முதல்கட்டமாக திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்