இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் மழை – வானிலை மையம் தகவல்!

சனி, 6 ஆகஸ்ட் 2022 (14:25 IST)
தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் ஒரு சில பகுதிகளில் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழையே பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதன் பின்னர் அந்த தாழ்வு பகுதி தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆம், கேரளா  தமிழகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பலத்த மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்