''ஜல்லிக்கட்டு'' விளையாட்டின் நெறிமுறைகள் வெளியீடு - தமிழக அரசு

சனி, 26 டிசம்பர் 2020 (20:45 IST)
தமிழகத்தில் வருடம்தோறும் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடத்தப்படுவது இந்நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தின் வீர விளையாட்டு நடத்துவதற்கான  ஜல்லிக்கட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் கூறியுள்ளதாவது :

ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஜல்லிக்கட்டு மஞ்சு விரட்டில் அதிகப்பட்சமாக 300 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

காளையுடன் வருபவர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிசிவ் சான்று பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாடுபிடி வீரர்கள் கொரோனாஇல்லை என்ற சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்