இதனால் கடந்த ஆண்டு செல்லூர், கட்டபொம்மன் நகர், பி.பி.குளம் மற்றும் நரிமேடு ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
தற்போது, வலது புற கரையில் அமைந்துள்ள தலை மதகின் மூலம் விநாடிக்கு 1,090 கனஅடி தண்ணீரை வெளியேற்றும் வகையில் புதிதாக 290 மீ நீளத்திற்கு மூடிய கால்வாயாக அமைத்து வைகையாற்றில் சேர்க்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் இந்த பகுதியில் வெள்ள நீரால் பிரச்சனை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.